20.1 C
Scarborough

ட்ரம்ப் – கார்னி நீண்ட நேரம் உரையாடல்!

Must read

திங்களன்று அமெரிக்க அதிபர் Donald Trump உடன் நீண்ட நேரம் பேசியதாகவும், இது ஒரு நல்ல உரையாடல் என்றும் பிரதமர் Mark Carney செய்தியாளர்களிடம் கூறினார்.

வர்த்தகம், புவிசார் அரசியல், ஏனைய தொழிலாளர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் பேசினோம் என்று புதன்கிழமை தனது அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் Carney கருத்து வெளியிட்டார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து கனேடியர்கள் எப்போது முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று கேட்டதற்கு, அதற்கான காலக்கெடுவை தீர்மானிக்கவில்லை அதற்கு பதிலாக Canada-U.S.-Mexico ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் வரும் பொருட்கள் Trump இன் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால், சராசரியாக கனடா உலகின் ஏனைய நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது என Trump நினைவு படுத்தினார் என்று பதிலளித்தார் பிரதமர்.

எங்களிடம் ஒரு மூத்த குழு உள்ளது அவர்கள் Washington இல் இருக்கிறார். அவர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பலதரப்பு சந்திப்பை மேற்கொள்கிறார்கள். என்று Carney மேலும் கூறினார். இந்த இராஜதந்திர நகர்வுகளில் உடனடி வெள்ளை புகையை எதிர்பார்க்க வேண்டாம், ஆனால் நாங்கள் தொடர்ந்தும் உரையாடல்களை நடாத்தி வருகிறோம் என்றார்.

February இல் கனேடிய பொருட்களுக்கு கடுமையான வரிகளை அமுல்படுத்தியபோது Trump ஒரு நீடித்த வர்த்தகப் போராக மாற்றினார். அதன் பின்னர் அவர் CUSMA இற்கு இணக்கமான இறக்குமதிகளுக்கு விலக்கு அளித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில், CUSMA-வின் கீழ் வரும் பொருட்களுக்கு விலக்கு அளித்ததன் மூலம் கனடா அதன் பல எதிர்க்கட்டணங்களைக் குறைப்பதாக Carney அறிவித்தார். இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தைகளைத் தூண்ட உதவியதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரதமர் “ஆம்” என்றார். இதற்கிடையில், CUSMA அடுத்த ஆண்டு மதிப்பாய்வுக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article