16.8 C
Scarborough

ட்ரம்புக்கு பதிலடி தர கனடா இதை செய்ய வேண்டும்: NDP தலைவர் ஜக்மீத் சிங் வெளிப்படை

Must read

கனடா மீதான வரிகள் குறித்த டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிற்கான முக்கியமான கனிம ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என NDP தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார்.

முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியை முடக்குவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களையும் நான் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த முக்கியமான கனிமங்கள் அமெரிக்காவுக்குள் செல்வதை நிறுத்துவோம்.

டொனால்ட் ட்ரம்பை வரிகளிலிருந்து பின்வாங்கச் செய்வதற்கு விரைவான வழி வேறு இல்லை என்றும் ஜக்மீத் சிங் குறிப்பிட்டுள்ளார். தரவுகளின்படி, முக்கியமான கனிம ஏற்றுமதிக்கு அமெரிக்கா கனடாவையே முதன்மையாக நம்பியுள்ளது.

2023ல், கனடா அதன் கனிம ஏற்றுமதியில் 59 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவுடனான முக்கியமான கனிம வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 38.2 பில்லியன் டொலராகும்.

ஆனால் கனடாவின் முக்கியமான கனிம இறக்குமதியில் நாற்பது சதவீதம் அமெரிக்காவிலிருந்து வருகிறது. இந்த நிலையில் ஜக்மீத் சிங் தெரிவிக்கையில், ட்ரம்புடன் விருந்தில் கலந்துகொள்வதால், கனடாவுக்கு இந்த விவகாரத்தில் உதவாது.

பிரதமர் ட்ரூடோ உட்பட சில தலைவர்கள் அமெரிக்காவுக்கு விரைந்து ட்ரம்புடன் சந்திப்பு நடத்தியதையே ஜக்மீத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் பகுத்தறிவு உள்ளவர் அல்ல. அவருடன் சாப்பிடும் மேஜையில் ஒரு திட்டத்தைப் பற்றி விவாதிக்க முடியாது.

ட்ரம்ப் ஒரு கொடுமைக்காரன், கொடுமைப்படுத்துபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்கிறார்கள், அதுதான் வலிமை. வலிகளையும் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். அதனால் கனடாவுடன் அவர் சண்டையிட விரும்பினால், அது அமெரிக்கர்களையும் பாதிக்கும் என்பதை நாம் தெளிவாக உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article