19.6 C
Scarborough

டொறன்ரோவில் வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பில் 8 பேர் கைது

Must read

கனடாவின் டொறன்ரோவில் உயர் தர வாகனங்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹால்டன் காவல்துறை GTA (Greater Toronto Area) அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

ஹோட்டல்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட வாகனங்களை திருடப்பட்ட வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய முடியாத “கூல் ஆஃப்” (Cool Off) பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல் பார்க்கிங் இடங்களில் வாகனத் திருட்டு அதிகரித்ததைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருடர்கள் இரவு நேரங்களில் ஹோட்டல் வாகனத் தரிப்பிடங்களை கண்காணித்து, ஒரு ஜன்னலை உடைத்து வாகனத்திற்குள் பிரவேசிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் திருடிய வாகனத்தை ஜீ.பி.எஸ் மூலம் கண்டு பிடிக்க முடியாத வகையில் வாகனங்களில் மாற்றங்களை செய்வதாக தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மொத்தம் 90 குற்றச்சாட்டுகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article