14.9 C
Scarborough

டொரோண்டோவில் வீடுகளில் பனி அகற்ற அரசு உதவி

Must read

டொரோண்டோவின் தொடர்ச்சியான பனிப்புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தங்கள் வீட்டு முற்றம், நடைபாதை மற்றும் அடைப்புகளிலிருந்து பனியை அகற்றுவதற்கு நகராட்சி சேவையைப் பெற 311 இலக்கம் மூலமாக கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்வரும் வழிகளில் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. • டொரோண்டோ நகர இணையதளம் அல்லது 311 அழைப்புக் கோரி செய்யலாம்.

• இந்த சேவையை பெற, நகராட்சி நடைபாதை பனிநீக்க சேவையுடன் இணைந்த இடங்களில் இருப்பது அவசியம். (குறிப்பாக எடோபிகோ, நார்த் யோர்க், மற்றும் ஸ்கார்பரோ ஆகிய பகுதிகள் இதற்குள் வருகின்றன.)

• வீதிகளில் பணி அகற்றியதன் பின்னர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

• வீட்டின் முன்பாக உள்ள பனி அடுக்கு குறைந்தது 25 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.

நகராட்சி அதிகாரிகள், இந்த முறை மூன்று பெரிய பனிப் புயல்களுக்கு பிறகு பனியால் மூடப்பட்ட நகரின் முக்கிய இடங்களைத் துப்புரவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

450-க்கும் மேற்பட்ட டிரக் (dump trucks) பனியை நகரத்தின் ஐந்து முக்கிய சேமிப்பு இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

முதன்மையாக மருத்துவமனைகள், முக்கிய வீதிகள், சாலையோர நுழைவாயில்கள், பஸ்கள் நிற்கும் இடங்கள் மற்றும் பள்ளி பகுதிகள் துப்புரவாகும், அதன் பிறகு மட்டுமே குடியிருப்பு பகுதிகள் கவனிக்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article