டொரொண்டோ நகரத்தில் காணி தொடர்பான பல விற்பனைப் பத்திரங்களில் இடம்பெற்ற மோசடிகளின் அடிப்படையில் இரண்டு சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்டல் என்ட் புய் Cartel & Bui LLP என்ற சட்ட நிறுவனத்தில் பங்குடமையாளர்களான சட்டத்தரணி சிங்கா புய் (வயது 42) கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் தனது சேவை பெறுனர்கள் உட்பட பலரை மோசடியின் மூலம் ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்மீது தற்போது மொத்தம் 42 குற்றச்சாட்டுகள், அதில் 5,000 டொலருக்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான 24 வழக்குகள், மேலும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டுகள் 17 என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதே நிறுவனத்தின் மற்றொரு பங்குடமையாளரான நிக்கோலஸ் கார்டெல் (வயது 61) மீது ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒன்டாரியோ சட்ட சங்கத்தின் தகவலின்படி, தற்போது சிங்கா புயும், நிக்கோலஸ் கார்டெலும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.