13.5 C
Scarborough

டொரொண்டோவில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை தேடி வலைவீச்சு!

Must read

டொறண்டோ நகரின் மைய பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்களை தாக்கி, கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மார்ச் 19 ஆம் தேதி இரவு 9:10 மணியளவில், பே மற்றும் டுண்டாஸ் (Bay and Dundas) வீதிகளுக்கு அருகே ஒரு கடையில் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

போலீசாரின் அறிக்கையின் படி, குற்றச்சாட்டு உடையவர் கடைக்கு சென்று பல பொருட்களை ஒரு கூடையில் வைத்துள்ளார்.

பிறகு அந்தக் கூடையை கடையின் முன்பாகவிட்டு சென்றுள்ளார். ஒரு கடை ஊழியர் கூடையை எடுத்தபோது, குற்றவாளி அவரை தாக்கி அதை மீண்டும் கைப்பற்ற முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றவாளி கடை ஊழியர்களின் மீது “தெரியாத ஒரு பொருளை” தெளித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீசார் தெரிவித்ததன்படி, குற்றவாளி சுமார் 20 வயது மதிக்கத்தக்க, ஒல்லியான உருவம் கொண்ட, நேரான கருப்பு முடி வைத்த பெண் என விவரிக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக அவர் கருப்பு நிற ஜிப்-அப் ஹூடி, நீலம் மற்றும் வெள்ளை நிற பைஜாமா பேன்ட், மற்றும் வெள்ளை காலணிகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், அல்லது குற்றவாளியைப் பற்றிய தகவல்கள் உள்ளவர்கள், போலீசாரைத் தொடர்புகொள்க அல்லது கிரைம் ஸ்டாப்பர்ஸ் (Crime Stoppers) வழியாக உரிய தகவல்களை மறைமுகமாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article