0.9 C
Scarborough

டொரண்டோவில் வீடு விற்பனை எழுச்சி பெறும் சாத்தியம்!

Must read

பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கைக் குறைவு காரணமாக, கடந்த ஆண்டின் பெரும்பகுதியைப் போலவே வாங்குபவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டதால், கடந்த மாதம் Greater Toronto Area வீடுகள் விற்பனை ஆண்டு அடிப்படையில் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.

​Toronto Regional Real Estate Board (TRREB) தரவுகளின்படி, December மாதம் முழுவதும் Toronto பகுதியில் 3,697 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீதம் குறைவாகும். அத்துடன், November மாதத்துடன் ஒப்பிடும்போது பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப (seasonally adjusted basis) இந்த விற்பனை நடவடிக்கைகள் 0.4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

வழக்கமான ஒரு வீட்டின் விலையைக் குறிப்பிடும் composite benchmark price கடந்த ஆண்டை விட 6.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, சராசரி விற்பனை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் குறைந்து $1,006,735 ஆக உள்ளது.

​பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆண்டு முழுவதும் GTA வீட்டு விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக TRREB கூறுகிறது. புதிய விற்பனைப் பட்டியல்கள் கடந்த ஆண்டை விட 10.1 சதவீதம் உயர்ந்து, விற்பனைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், மொத்த விற்பனை 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

விற்பனைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த அந்தச் சூழல், வாங்குபவர்களுக்குச் சாதகமாக அமைந்தது, இது அவர்கள் குறைந்த விற்பனை விலைக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

​2026-ஆம் ஆண்டில் “சந்தை மீட்சியடைவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது” என்று TRREB தலைவர் Daniel Steinfeld கூறுகிறார். எனினும், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் ஒரு வலுவான நிலைக்குத் திரும்பியுள்ளன என்று வாங்குபவர்கள் நம்பும் பட்சத்திலேயே இது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article