14.6 C
Scarborough

டொரண்டோவில் திருடப்பட்ட Ferrari கார் மீட்பு!

Must read

கனடா – டொரண்டோவுக்கு வடக்கு பகுதியான அவிவாவிலிருந்து (Aviva) $1 மில்லியன் மதிப்புள்ள Ferrari 599 GTO கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தின் மோசடி விசாரணை அதிகாரி ஸ்டீபன் நாஸ்னர் (Stefan Nasner) இனால் இந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

இது திருடப்பட்ட வாகனங்களை “re-vinning” மூலமாக மூடிமறைக்கும் நவீன மோசடி முறைகளில் ஒன்றாகும் என்றும் , காரின் VIN (Vehicle Identification Number) எண் மாற்றப்பட்டு, அதை பல வாகனங்களில் பயன்படுத்துவதன் மூலம் அதன் அடையாளம் மறைக்கப்படுவதாக விசாரணை அதிகாரி தெரிவிக்கிறார்.

இதன் மூலம் காப்பீடு நிறுவனங்களை ஏமாற்றி பெரும் தொகைகளை பெற முயற்சி செய்யப்பட்டிருப்பதாகவும். Ferrari கார் ஏற்கனவே ஒருமுறை போலி விபரங்களுடன் காப்பீடு தொகை பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வகையான மோசடிகள் கடந்த சில ஆண்டுகளில் 300% அதிகரித்துள்ளன என்றும் அவிவாவின் தேசிய விசாரணைப் பிரிவு முகாமையாளர் மைக் கார்டிலோ (Mike Cardillo) தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article