மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றதிலிருந்து அமெரிக்கஅதிபர் டொனால் டிரம்ப் உடன் விரைவில் ஓர் சந்திப்பை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்காவிற்கான கனேடியத் தூதர் கிறிஸ்டென் ஹில்மன் கூறுகிறார்.
அமெரிக்காவுடன் கார்னி சிறந்த உறவை உருவாக்க முயற்சிப்பதாகவும், அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் டிரம்ப் என்ன செய்ய முயற்சிக்கின்றாரோ அதனையே பிரதமரும் கனடாவிற்கு செய்ய நினைக்கின்றார் எனினும், கடந்தவாரம் அமெரிக்காவின் வர்த்தகச் செயலாளர் ஹாவர்ட் லுடின்க் உடனான சந்திப்பு கனடாவிற்கு சாதகமாக அமையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் இன்று தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரான்ஸ் மற்றும் மற்றும் ஐக்கிய இராச்சியம் சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.