15.4 C
Scarborough

டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை

Must read

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கடியில் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி டுபாய் மற்றும் மும்பைக்கு  இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் டுபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியிருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.

ரயில் வேகமாக பயணிக்கும் போது ரயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.

டுபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை டுபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.

பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article