ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக டிராகன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதிப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த டிராகன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .
இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரங்கராஜன் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து பிரமாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்கு அதிபதிகள் நடிகர்கள் இயக்குனர்கள் பதிவாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் பூஜை விழாவில் தொடங்கி படத்தில் நூறாவது நாள் கொண்டாட்டம் வரை காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
–