அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (18) வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
மேலும் இந்த சந்திப்பில் ஐரோப்பிய பேரவையின் தலைவர், பிரித்தானிய பிரதமர், பிரான்ஸ் ஜனாதிபதி, ஜேர்மன் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழு கலந்து கொண்டது.
தொடர்புடைய கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.