ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமையவுள்ளது.
வடக்கு உள்ளிட்ட இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் முதலீடுகள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்படும் என இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இலங்கையில் இந்தியா மேற்கொண்டிருந்த முதலீடுகளை ஜே.வி.பி. உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.