ஹமில்டனில் உள்ள ஒரு மதுபானசாலை ஒன்றின் வெளியே சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
போவன் வீதி மற்றும் ஜாக்சன் வீதி கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் குறித்து அதிகாலை 12:50 மணியளவில் பொலிஸாருக்கு பல அழைப்புகள் வந்துள்ளன.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பல கைத்துப்பாக்கிகளை கண்டதோடு தாக்குதல் மற்றும் துப்பாக்கிகளிலிருந்து 80 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.
இதேநேரம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று பேர் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இப்போது பாதுகாப்பாக இருப்பதோடு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலர் ஈடுபட்டதாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலும் தகவல் தெரிந்தவர்கள் தகவல் வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.