19.2 C
Scarborough

ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

Must read

இஸ்​ரேலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய திடீர் தாக்​குதலில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து இஸ்​ரேல் காவல் துறை​யினர் நேற்று கூறிய​தாவது: கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெரு​வில் உள்ள ரமோத்சந்​திப்​பில் இந்த சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. பேருந்​தில் பயணம் செய்த, பேருந்​துக்கு காத்​திருந்த பயணி​கள் மீது காரில் வந்த பயங்​கர​வா​தி​கள் கண்​மூடித்​தன​மாக இந்த துப்​பாக்​கிச்​சூட்டை நடத்​தி​யுள்​ளனர். இதில், 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 12 பேர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

முதல்​கட்ட தகவலின்​படி 2 தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யுடன் வந்து இந்த தாக்​குதலில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​கள் பாலஸ்​தீனத்​தின் மேற்கு கரை பகு​தியை சேர்ந்​தவர்​கள். பாது​காப்பு படை​யினர் நடத்​திய எதிர்​ தாக்​குதலில் தீவிர​வா​தி​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். இவ்​வாறு காவல் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

இஸ்​ரேலிய பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்​ஸ், பாலஸ்​தீன தீவிர​வாத அமைப்​பான ஹமாஸுக்கு ஆயுதங்​களைக் கைவிட்டு சரணடை​யு​மாறும், இல்​லை​யென்​றால் ஹமாஸ் அழிக்​கப்​படும் என்றும் இறுதி எச்​சரிக்கை விடுத்த சில மணி நேரங்​களில் இந்த தாக்​குதல்​ நடை​பெற்​றுள்​ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article