கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் Statistics Canada, ஜூன் மாத பணவீக்க விகிதத்தை (Inflation Rate) இன்று வெளியிட உள்ளது.
மே மாதத்தில் 1.7% இருந்த பணவீக்க விகிதம், ஜூன் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததால், பணவீக்கம் 2% அளவிற்கு கூட அதிகரித்திருக்கலாம் எனவும் பி.எம்.ஓ வங்கி வெளியிட்ட மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஜூன் மாத பணவீக்க அறிக்கையானது ஜூலை 30ஆம் திகதி நடைபெறவுள்ள வட்டிவிகித தீர்மானத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் பணவீக்க அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.