சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் புதன்கிழமை (02) அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு றியல் தகுதி பெற்றுள்ளது.
றியல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொன்ஸலோ கர்சியா பெற்றிருந்தார்.