வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதில் மாதவன் அப்படியே ஜி.டி.நாயுடுவாக மாறியிருந்தார்.
இப்படத்தில் சத்ய ராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் விஜய் மூலன் அறிவித்துள்ளார். நிறைவு விழா விருந்து துபாயில் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.