ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
வட ஜப்பானின் ஹோன்ஷு தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்காடியோ தீவின் தென் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது. பல கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

