2.4 C
Scarborough

‘ஜனநாயகன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

Must read

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை பொங்​கலுக்கு வெளியிட உச்ச நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்யப்பட்டுள்ளது.

விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ ஜன.9-ம் தேதி வெளி​யாக இருந்​தது. தணிக்கை சான்​றிதழ் காரண​மாக வெளி​யா​காத​தால் ரசிகர்​கள் ஏமாற்​றமடைந்​தனர். இந்​நிலை​யில் இப்​படத்​தின் கேவிஎன் புரொடக்​‌ஷன்ஸ் தயாரிப்​பாளர் வெங்​கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்​னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்​.

அதில் அவர், ‘வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ள​தால், என்னால் எல்​லா​வற்​றை​யும் பகிர முடிய​வில்​லை. கடந்த டிசம்​பர் 18-ம் தேதி ‘ஜன​நாயகன்’ தணிக்​கைக்கு அனுப்​பப்​பட்​டது. அதைக்குழு ஆய்வு செய்​து, டிச. 22 அன்று சில மாற்​றங்​களைப் பரிந்​துரைத்​தது. ‘யுஏ 16 பிளஸ்’ சான்​றிதழ் வழங்​கப்​படும் என மெயில் மூலம் தெரி​வித்​தனர்.

பரிந்​துரைக்​கப்​பட்ட மாற்​றங்​களைச் செய்து மீண்​டும் சமர்ப்​பித்த போதும், சான்​றிதழ் பெற முடிய​வில்​லை. ரிலீஸு-க்கு சில நாட்களே இருந்த நிலை​யில், ஜன.5-ம் தேதி மாலை, ஒரு புகாரின் பேரில் மறு ஆய்​வுக் குழு​வுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்​ட​தாக எங்களுக்​குத் தகவல் கிடைத்​தது.

படத்தை ரிலீஸ் செய்ய மிகக் குறைந்த நாட்​களே இருக்​கும் போது, புகார் கொடுத்​தவர் குறித்த தெளி​வின்மை காரண​மாக, உயர் நீதிமன்​றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்​றும் 7-ம் தேதி​களில் வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், படத்​துக்கு ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழை வழங்க உத்​தர​விட்​டது.

ஆனால், தணிக்கை வாரி​யம் உடனடி​யாக உயர்நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​தது. இதன் விளை​வாக, சான்​றிதழ் வழங்​கு​வதற்​கான நீதி​மன்ற உத்​தர​வுக்கு தற்​போது இடைக்​காலத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சூழலில் ஆதர​வளித்த ரசிகர்​கள் மற்​றும் அனை​வரிடத்​தி​லும் பகிரங்​க​மாக மன்​னிப்பு கேட்​டுக் கொள்​கிறேன். திட்​ட​மிட்​டபடி படத்தை வெளி​யிட அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்ட போதி​லும், கட்​டுப்​பாட்​டுக்கு அப்​பாற்​பட்ட சில காரணங்​களால் சொன்ன தேதி​யில் ரிலீஸ் செய்​ய​ முடிய​வில்​லை.

கடந்த 33 ஆண்​டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்​களிட​மிருந்து பெற்ற அன்​பு, திரைத்​துறைக்கு ஆற்றிய பங்​களிப்புக்காக அவருக்கு ஓர் அற்​புத​மான பிரி​யா​ விடை அளிக்​கப்பட வேண்​டும். அதற்கு அவர் அனைத்து வகை​யிலும் தகு​தி​யானவர். நீதித்​துறை நடை​முறை​கள் மீது நம்​பிக்கை இருக்​கிறது. விரை​வில் படம் வெளி​யாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்​ளார்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article