7.8 C
Scarborough

சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

Must read

ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு செய்​துள்​ளது. இதன்​படி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், மும்பை வான்​கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

இறு​திப் போட்​டியை உலகின் மிகப்​பெரிய மைதான​மான ஒரு லட்​சம் பேர் அமர்ந்து பார்க்​கக்​கூடிய அகம​தா​பாத் மைதானத்​தில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யும் இதே மைதானத்​தில்​தான் நடத்​தப்​பட்​டது. டி20 உலகக் கோப்பை தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை ஐசிசி அடுத்த வாரம் வெளி​யிடக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அநேக​மாக போட்​டிகள் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி நிறைவடையக்​கூடும். இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி பங்​கேற்​கும் ஆட்​டங்​கள் மட்​டும் இலங்​கை​யில் நடத்​தப்பட உள்​ளது.

அங்கு 3 நகரங்​களில் போட்டி நடை​பெற உள்​ளது. கண்​டி, கொழும்பு மைதானங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. 3-வது மைதானம் தொடர்​பாக இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. ஒரு​வேளை பாகிஸ்​தான் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னால் அந்த ஆட்​டம் இலங்​கை​யில் நடத்​தப்​படும்

HinduTmail

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article