கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்வந்தியை கொண்டுவந்து என்ன செய்தீர்கள் என சிலர் கேட்கின்றனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அரசியல் தொடர்புகள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

