16.4 C
Scarborough

செம்மணி மனித புதைகுழி : இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணை மேற்கொள்ளவேண்டும் – யாழ். கிறிஸ்தவ ஒன்றியம்!

Must read

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ். கிறிஸ்தவ ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வது தார்மீகக் கடமை. கொலை செய்யாதே (விடுதலைப்பயணம் 20:13) இறைகட்டளையை அங்கீகரிக்காத சூழ்நிலை நிலவுவதால், உன் சகோதரன் எங்கே? (தொடக்க நூல் 49) எனும் இறைகுரலுக்கு, கொலையாளியுடன் இணைந்து, “நான் என்ன… காவலாளியோ?” எனும் பதில் கேள்வியே முன்னுரிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

யாழ். செம்மணி (சித்துப்பாத்தி) மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகள் சுட்டிக்காட்டும். முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பை யாழ். கிறிஸ்தவ ஒன்றியமாக கண்டிக்கிறோம். இக்கொலைகளை மேற்கொண்ட இலங்கை அரசு, அதற்கு உதவிய சர்வதேச நாடுகள் அனைத்தினதும் பொறுப்பற்ற கொலை முன்னெடுப்புகள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் 67681 பதிவிடுகிறோம். அனைத்து இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்கள் அடிப்படையில் தற்போது காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் பேரழிவு உட்பட கொலை வலையமைப்புகளையும் “கூட்டுப்பாவம்” என அடையாளப்படுத்துகிறோம்.

கொலை சமயக் கட்டளையாக கொலைசெய்யாதே-விப 20:13 மனித மாண்பை வலியுறுத்தும் இருப்பினும், “கொலைசெய்தல்” இடைவிடாமல் அகிலமெங்கும் தொடரப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்தால் முறையாக நடைமுறைப்படுத்தாத நிலையே யதார்த்தமாகிவிட்டது. இலங்கை வேலைவாய்ப்பு

வலையமைப்பு தரும் பேரவலத்தை விட உலகளாவிய ரீதியில் போட்டியிடும் ஆயுத உற்பத்தி அமைப்புகளும், உலகை அழிக்கும் வலுவுள்ளது என நிரூபிக்கும் வல்லரசாகும் போட்டிகளுமே தொடர்கின்றது. பொதுவாக அரசுகள் ஒடுக்கும் கொலைகார அரசுகளை காப்பாற்ற முனைவதும் நாசகார கொலை வலையமைப்பினை எடுத்துக்காட்டுகிறது. வெளியிடப்பட்ட அழிவையே அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை இலங்கை அரசின் கொலை வலையமைப்பை உறுதிப்படுத்தி வாழ்த்துவது போலவே அமைந்திருந்தது.

தொடர்ந்து ஆட்சிக்கு வரும் சிங்கள பெளத்த அரசுகளால் அவர்களுடைய அடக்குமுறைக்குப் பலியான தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கொடுக்க, எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது என்பது வரலாற்று உண்மை என்பதை சர்வதேசம் உட்பட அனைவரும் புரிந்துகொள்வது முக்கியம்.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்ட 65 என்புத்தொகுதிகள் (09.07.2025இல் கிடைத்த தகவல்) எமக்கு இன்று வெளிப்படுத்தும் உண்மை என்ன? அகழ்வின் போது வெளிப்பட்ட நீல நிறத்திலான புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு பெண் குழந்தையொன்றின் எலும்புக்கூடு, பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்று என்பன எமது மனித நேயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன அல்லவா? இச்செம்மணி மனித புதைகுழி மற்றும் என்புத் தொகுதிகள், நாம் கொலைகாரரின் நாட்டில் வாழ்கிறோம் என்பதை மட்டுமே வெளிப்படுத்துகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article