11.1 C
Scarborough

செம்மணி புதைகுழி: புதிய பகுதியிலும் அகழ்வுப் பணி!

Must read

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதிகளிலும் எதிர்வரும் நாள்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப் படுத்தப்பட்டு தொல்லியல் பேராசி ரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதிகள் நீதிமன்ற உத்தர வுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர் களின் உதவியோடும் துப்பரவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அந்தப் பகுதிக ளிலும் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்படவுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article