யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி பேரவலத்துக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆஸ்திரேலியா, கன்பராவில் இன்று நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வளர்கள், மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள பன்நாட்டு தூதரகங்கள் மற்றும் ஐ.நா. அலுவலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
‘ இலங்கையில் உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை. எனவே, சர்வதேச விசாரணையே உண்மையை வெளிக்கொண்டுவரும்.” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.