செம்மணி புதைகுழியை பார்ப்பதை விட நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது கச்சத்தீவுக்கு சென்று இருந்தார். இதனை தொடர்ந்து எமது பிரதேச சபை உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் காலங்களில் வரும் போது செம்மணியை பார்வையிடுவதாக ஜனாதிபதி கூறி சென்று இருக்கிறார்.
பார்ப்பதை விட நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு, செம்மணியை பொறுத்த வரையில் இனி வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறமால் பார்த்துக்கொள்வதோடு, அதற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு.
முந்தைய கால அரசாங்கம் போல் இல்லாமால், எமது அரசாங்கம் ஒளிவு மறைவு இல்லாமல் அதற்கு பூர்வாங்க வேலைகளையும், பூரணமான ஒத்துழைப்பையும் நீதித்துறைக்கு பெற்று கொடுத்துள்ளோம், அதனுடாக நீதியை நிலைநாட்ட முடியும், செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.