சூடானில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் கடந்த 3 நாட்களில் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராகத் துணை இராணுவம் தீவிரமாகப் போர் தொடுத்து வருகிறது.
இதில் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப் படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனால் இராணுவத்தினர் அங்குக் களம் இறங்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.