சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இரு நாட்கள் பயணமாகவே அவர் கொழும்பு வருகின்றார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி அநுரரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவுடனும், சீன வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.
சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை -சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்து தனது விஜயத்தின்போது சீன வெளிவிவகார அமைச்சர் அவதானம் செலுத்தவுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன- இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவதற்காக, 2022 ஜனவரியில் கடைசியாக கொழும்பு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கடந்த மாதம் இலங்கை வந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் கொழும்பு வந்திருந்தார். இதன்போது இலங்கைக்குரிய உதவித் திட்டங்களை அவர் அறிவித்தார்.

