சீனா தனது வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்திற்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து இராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக சீனா மாறியிருக்கிறதை அவதானிக்க முடிகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு இராணுவத்திற்கு 249 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை 7.2 சதவிகிதம் அதிகமாகும்.