சீனாவில் நிறுவனங்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக பொருட்களின் விலை அதிக அளவில் குறைக்கப்படுகின்றன.
இதன் விளைவாக சீனப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, போட்டியை முன்னிட்டு பொருட்களின் விலையை நிறுவனங்கள் பேரளவில் குறைப்பதைத் தடுக்க சீனா அதன் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தங்கள் ஜூன் 27ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டன.
நியாயமற்ற போட்டித்தன்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொருட்களை வாங்கும் விலைக்குக் குறைவாக விற்கும் நிலை வணிகர்களுக்கு ஏற்படுத்துவதை புதிய சட்டம் தடுக்கிறது.
நியாயமற்ற போட்டித்தன்மையால் சீனாவில் பணப் புழக்கத்தில் தளர்வுநிலை நீடிக்கக்கூடும் என்று ஷங்காய் நகரில் உள்ள சீனா ஐரோப்பிய அனைத்துலக வர்த்தப் பாடசாலையைச் சேர்ந்த பொருளியல் பேராசிரியர் ஹூ குவாங்சோ தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் மிக நீண்டகாலப் பணப் புழக்கத்தில் தளர்வுநிலையை சீனா எதிர்கொள்கிறது என்று பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் செலவு செய்வதைப் பயனீட்டாளர்கள் குறைத்துள்ளதையும் தேவைக்கும் அதிகமான பொருட்களை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதையும் இது பிரதிபலிப்பதாக அவர்கள் கூறினர்.