தெற்காசிய நாடுகளின் சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.சீனாவும் பாகிஸ்தானும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. சீனாவின் குன்மிங் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தியாவை, தவிர்த்து இலங்கை, மாலதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளையும் இந்தப் புதிய கூட்டணிக்குள் உள்ளீர்ப்பதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பிராந்தியத்தின் நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதும் நோக்கில் இந்த புதிய அமைப்பு உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சார்க் அமைப்பில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.