19.6 C
Scarborough

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘மெஜந்தா’

Must read

சாந்தனு பாக்யராஜ் -அஞ்சலி நாயர் நடிக்கும் படத்துக்கு ‘மெஜந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். “காதல், நகைச்சுவை கலந்த படமான இது, ‘ஃபீல் குட்’ படமாக இருக்கும். படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்பட இருக்கிறது” என்றது படக்குழு. இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article