13.2 C
Scarborough

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

Must read

ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க்.

அபார வேகம், அற்​புத​மான ஸ்விங், பயமுறுத்​தும் யார்க்​கர்​கள், பவுன்​சர்​களுக்கு பெயர் பெற்ற மிட்​செல் ஸ்டார்க், டி 20 கிரிக்​கெட்​டில் 65 ஆட்​டங்​களில் விளை​யாடி 79 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஆடம் ஜாம்​பாவுக்​குப் பிறகு (103 போட்​டிகளில் 130 விக்​கெட்​டு​கள்) சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் அதிக விக்​கெட்​கள் கைப்​பற்​றிய இரண்​டாவது வெற்​றிகர​மான ஆஸ்​திரேலிய பந்து வீச்​சாள​ராக திகழ்ந்​தவர் மிட்​செல் ஸ்டார்க்.

ஓய்வு குறித்து 35 வயதான மிட்​செல் ஸ்டார்க் கூறும்​போது, “ஆஸ்​திரேலி​யா​வுக்​காக நான் விளை​யாடிய ஒவ்​வொரு டி20 ஆட்​டத்​தின் ஒவ்​வொரு நிமிடத்​தை​யும், குறிப்​பாக 2021 உலகக் கோப்​பையை நான் மிக​வும் ரசித்​திருக்​கிறேன். இந்​திய டெஸ்ட் சுற்​றுப்​பயணம், ஆஷஸ் மற்​றும் 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு புத்​துணர்ச்​சி​யுட​னும், உடற்​தகு​தி​யுட​னும், சிறந்த நிலை​யில் இருப்​ப​தற்கு சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வதே சிறந்த வழி என்று நான் நினைக்​கிறேன். இந்த முடிவு அடுத்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கு எங்​களது பந்​து​வீச்சு குழு தயா​ராகு​வதற்கு நேரத்தை கொடுக்​கும்” என்​றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article