மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக இந்திப் படம் உருவாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மித்ரன். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எப்போது வெளியீடு என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக இந்திப் படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிகிறது. இதனை பாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
ஷாபினா கான் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் ‘ரவுடி ரத்தோர் 2’ படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு சரிவர போகவில்லை. அதுமட்டுமன்றி முதல் பாகத்தின் உரிமையினை வைத்திருக்கும் டிஸ்னி நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. இதனால் இதன் பணிகளை அப்படியே கைவிட்டுவிட்டார்கள்.
இதற்காக தயார் செய்த கதையினை, ‘ரவுடி ரத்தோர் 2’ என்ற பெயரில் அல்லாமல் வேறொரு பெயரில் படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். 2-ம் பாகத்துக்காக முதல் பாகத்தில் இருந்து சேர்க்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் தூக்கிவிட்டு புதிய கதை தயாராகி வருகிறது. இக்கதையினை தான் மித்ரன் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.