15.1 C
Scarborough

சம்பியன்ஸ் டிராபி முதல் ஓவரிலேயே வெளியேறிய ஸமான்

Must read

சம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் முதல் ஓவரிலேயே உபாதை காரணமாக வெளியேறினார்.

சம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சகீன் ஷா அஃப்ரிடி வீசிய முதல் ஓவரில் வில் யங் அடித்த பந்தினை எல்லைக் கோட்டருகே துரத்திப் பிடித்த பாகிஸ்தான் ஃபீல்டர் ஃபகார் ஸ்மான் பின்புற முதுகு வலியால் வெளியேறினார்.

ஃபகார் ஸமானுக்குப் பதிலாக கம்ரான் குலாம் ஃபீல்டிங்கில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே சையும் அயூப் உபாதை காரணமாக வெளியேறியதால் ஸ்மான் அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணியில் முக்கியமான 5 அனுபவமிக்க வீரர்கள் உபாதை காரணமாக வெளியேறினார்கள்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article