கனடாவின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் Evan Solomon, சமூக ஊடகத் தளமான X- தளத்தை தடை செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத் தளத்தில் நிலவும் Deepfake சர்ச்சைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Elon Musk இற்கு சொந்தமான இந்தத் தளத்தில், அதன் செயற்கை நுண்ணறிவு Chatbot ஆன ‘Grok’ மூலம் உருவாக்கப்பட்ட பாலியல் ரீதியான Deepfake படங்கள் கடந்த வாரங்களில் அதிகளவில் பரவின. இது உலகளாவிய ரீதியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
UK இலும் அதன் ஒழுங்குமுறை அமைப்பான ‘Ofcom’ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் விளைவாக பிரித்தானியாவில் X தளம் தடை செய்யப்படக்கூடிய சூழல் உருவாகலாம். என எதிர்வு கூறப்படுகிறது. எனினும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் Evan Solomon X தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ஊடகச் செய்திகளுக்கு மாறாக, கனடா இத்தடையைப் பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சர்ச்சைகள் மத்தியிலும், Liberal அரசாங்கம் தொடர்ந்தும் X தளத்தைப் பயன்படுத்தி வருகிறது. Grok Chatbot ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் கிளை, France, India மற்றும் Brazil. உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்தும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

