14.6 C
Scarborough

சமஷ்டி மட்டுமே தமிழரசின் இலக்கு!

Must read

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” சமஷ்டி அடிப்படையில் தீர்வு கோருவது நாட்டை பிரிக்கும் நடவடிக்கை அல்ல. எனவே, சமஷ்டி தீர்வு பற்றி இந்த ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும். வடக்கு, கிழக்கை பிரிப்பதற்கு பங்கு வகித்தவர்களும் ஆட்சியில் இருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வு எனக் கூறப்பட்டாலும் இன்னும் முன்னேற்றகரமான நடவடிக்கை இல்லை. 30 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகள், காடாவது வழமை. அதனை அடிப்படையாகக்கொண்டு மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கு கிடையாது.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article