NDP கட்சியின் இடைக்காலத் தலைவர் Don Davies, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார், ஆனால் இந்த சூழ்நிலை கற்பனையானது என்றும், Liberals களுடன் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் வலியுறுத்துகிறார்.
நீங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்துடன், நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அத்தகைய முன்மொழிவு எங்களிடம் முன்வைக்கப்படவில்லை, என்பதால் நாங்கள் அதைப் பற்றி எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்று என்னால் கூற முடியாது, என்று Davies மேலும் கூறினார்.
ஆனால், NDP கட்சியினருக்கு இந்த நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும், அங்கு செயற்படவும் எந்தவொரு வாய்ப்பையும் வழங்கினால், அதனை பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்கிறார் NDP யின் இடைக்காலத் தலைவர்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, NDP வெறும் ஏழு இடங்களாகக் குறைக்கப்பட்டது, மேலும், 12 ஆசனங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அந்த அந்தஸ்தை இழந்ததன் மூலம், கட்சிக்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே உள்ளன, மேலும் நாடாளுமன்றத்தில் நிலையியல் குழுக்களிலும் எந்த உத்தரவாதமான இடங்களும் இல்லை.
இதற்கிடையில், Ontario நாடாளுமன்ற உறுப்பினர் Michael Ma வியாழக்கிழமை Conservatives களிடமிருந்து அரசாங்கத்துடன் இணைந்ததைத் தொடர்ந்து, Liberals கள் இப்போது பெரும்பான்மைக்கு ஒரு ஆசனம் மட்டுமே குறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

