பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான சன்டோஸூடன் 2025ஆம் ஆண்டு முடிவு வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றை நெய்மர் நீடித்துள்ளதாக அக்கழகம் செவ்வாய்க்கிழமை (24) அறிவித்துள்ளது.
மேற்குறித்த ஒப்பந்தமானது 33 வயதான நெய்மரின் ஒப்பந்தத்தை 2026 உலகக் கிண்ணத் தொடர் வரையில் நீடிப்பதற்கான தெரிவொன்றையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ஜனவரியில் சன்டோஸில் நெய்மர் இணைந்த நிலையில், முன்னைய அவரின் ஒப்பந்தமானது ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.