இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை அமெரிக்க இராணுவ விமானம் நாடு கடத்தத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவில் இருந்து அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த பென்டகன் விமானங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை, இராணுவ விமானங்கள் குவாத்தமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸுக்கு புலம்பெயர்ந்தோரை அனுப்பி வைத்துள்ளன.