சட்டத்தை அமுல்படுத்துவதில் மூன்றாம் தரப்பு தலையிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை சிறை சாலையில் சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
“முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தொடர்பாக நீதித்துறை எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை மூன்றாம் தரப்பு உண்மையில் கணித்திருந்தது. சட்டத்தின் ஆட்சி எவ்வாறு மேலோங்க வேண்டும் என்பது அரசியலமைப்பில் தெளிவாக இருக்கும்போது இதுபோன்ற ஒரு விஷயம் எப்படி நடக்க முடியும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட போவதாக யூட்டியுபரான சுதந்த திலகசிறி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரணில் கைது செய்யபப்ட்டதை அடுத்து யூடியூபர் சுதந்த திலகசிறி மீது ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.