ஒருகாலத்தில் கணிசமான விலையில் விற்கப்பட்ட Monstera Thai Constellation, Philodendron Pink Princess போன்ற மரக்கன்றுகள் தற்போது கனடாவில் உள்ள பெரிய வணிக மையங்கள், உணவகங்கள் மற்றும் தாவரப் பண்ணைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
கோவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் வீட்டுத் தோட்டப் பராமரிப்பில் கனடியர்களின் ஆர்வம் காட்டத் தொடங்கியதன் பயனாக இந்த அபூர்வ வகைத் தாவரங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
அதன் விளைவாக இந்த மரக்கன்றுகளின் விலையும் குறைந்துள்ளதாக Costa Farms இன் ஆராய்ச்சி பணிப்பாளர் ஜஸ்டின் ஹேன்காக் (Justin Hancock) தெரிவித்தார்.
அதன்படி, $400 செலவில் கிடைத்த இந்த மரக் கன்றுகள் இப்போது $45க்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.