மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவை தோற்கடித்தது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் வைஷ்ணவி விட்டல் பால்கே (2-வது நிமிடம்), சங்கீதா குமாரி (33-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (40-வது நிமிடம்), ருதுஜா தாதாசோ பிசல் (59-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். கொரியா அணி சார்பில் யுஜின் கிம் இரு கோல்கள் (33 மற்றும் 53-வது நிமிடம்) அடித்தார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொரியாவுடன் நாளை (12-ம் தேதி) மோதுகிறது.