9.5 C
Scarborough

கேரம் சாம்பியின் காஜிமாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

Must read

கேரம் சாம்பியின் காஜிமாவின் வாழ்க்கை வரலாறு ‘தி கேரம் குயின்’ என்ற பெயரில் படமாகிறது.

சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டவர் வடசென்னையைச் சேர்ந்த காஜிமா. அவரது வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாக உருவாகிறது. ‘தி கேரம் குயின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் காஜிமாவாக ரந்தியா பூமேஷ் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

இந்த விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். கதையின் முக்கியக் கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட், “இந்த படத்தின் கதைமிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் இயக்குநர் முரளி, “நான் ஏற்கனவே படங்கள் இயக்கி இருந்தபோதும் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு நல்ல உண்மைச் சம்பவத்தை படமாக எடுக்க தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

அதே போல காஜிமா குடும்பத்தாரும் கதையை திரைக்கதையை உருவாக்க முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும்போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மைதான், படம் பார்க்கும் ஒவ்வொரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும். படம் வெளியான பிறகு நான் பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பூஜையில் சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர் சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article