மேற்கு கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் கிசுமு-ககமேகா நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 10 பெண்கள், 10 ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாகவும், 20 பயணிகள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.இதேநேரம் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தகக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் ஒரு மயானத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர் எனவும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் நம்பப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கென்யாவின் சுகாதார அமைச்சு உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ “அவசர இரத்ததான முகாம்” நடத்த அழைப்பு விடுத்ததோடு “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல்” தெரிவித்துள்ளது.