குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால் மா ஒன்றின் தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கனேடிய உணவு ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொட்லிசம்(Botulism) நோய் பரவலுடன் தொடர்புடையதாக குறித்த பால் மா அமைந்துள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனமான பைஹார்ட் நிறுவனம் (ByHeart), அமெரிக்காவில் விற்பனையான அதன் அனைத்து தயாரிப்புகளையும் நவம்பர் 11ஆம் திகதி திரும்பப் பெற்றது.
இதற்கு முன்னர், சில தயாரிப்புகள் குழந்தைகளுக்கு பொட்லிசம் நோயை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னணியில் அவை திரும்பப் பெறப்பட்டிருந்தன.
எனவே, இந்த தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் எனவும், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் எனவும் கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

