14.6 C
Scarborough

குற்றவாளியின் அகதி அந்தஸ்த்தை நீக்கியது கனடா!

Must read

மெக்சிகோவை சேர்ந்த குற்றக் கும்பல் ஒன்றின் அங்கத்தவர் விண்ணங்களை சமர்பித்து பெற்றுக்கொண்ட கனேடிய அகதி அந்தஸ்த்தை கனேடிய நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இவர் மெக்சிகோவின் லா – பெமிலியா போதைப்பொருள் கும்பலுடன் இவர் தொடர்பு பட்டிருப்பதாகவும், அவர் தன்னைத் தானே ஒரு தாக்குதலின் சூத்திரதாரி என்று அடையாளப்படுத்தி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர் 2015 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து திருப்பி அனுப்பட்டிருந்த நிலையில் 2025 பெப்ரவரியில் அவர் மீண்டும் தனது ஒரு பிள்ளையுடன் கனடாவிற்கு வந்து அகதி அந்தஸ்த்து கோரியிருந்தார்.

எவ்வாறாயினும் தற்போது அவர் மார்வல் ஹேர்ஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவருடைய பிள்ளை பிரிடிஷ் கொலம்பியாவில் குடும்பத்தாருடன் வசிப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலைமைகளுக்கு மத்தியிலேயே கனேடிய அகதிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மஹீலா மொஹமட் இவரின் அகதி அந்தஸ்த்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தார். எவ்வாறாயினும் கனேடிய கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜூலி பிளெக்காட் மஹீலா மொஹமட்டின் தீர்மானத்தை இரத்துச் செய்திருக்கிறார்.

இவர் ஒரு கூலி தாக்குதல் நடத்துபவர் என்று அறிந்தும் இவரது குற்றச் செயல்களை குறை மதிப்பீடு செய்தமை ஏற்றுக்கொள்ளகூடியதல்ல என்றும், லா – பெமிலியா குற்றக் கும்பலுடன் இவர் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஆணைக்குழு உறுப்பினரால் நிராகரிக்கப்பட்டிருப்பதையும் நீதிமன்றம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் கனடாவில் போலியான ஆணவங்களை சமர்ப்பித்து அகதி அந்தஸ்த்து கோரியிருப்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article