கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் நேற்று (09) வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.