கியூபெக் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15 வயதுச் சிறுவன் நூரான் ரெஸாயி (Nooran Rezayi) பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நகர பொலிஸ் தலைவர் பாட்ரிக் பெலாங்கர் (Patrick Bélanger) மற்றும் லாங்க்யூய் பொலிஸ் படை (SPAL) மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லாங்க்யூய் நகர மேயர் கேத்தரின் ஃபோர்னியர் (Catherine Fournier), கியூபெக் பொதுப் பாதுகாப்பு அமைச்சரிடம் அதிகாரபூர்வமாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பொலிஸ் படை தவறான தகவல்களை அளித்ததுடன், சட்டரீதியான கடமைகளை மீறியதாகவும் ஆவணங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே மேயர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சுயாதீன விசாரணைக்கான அனைத்துக் காரணிகளும் இருந்தபோதிலும், லாங்க்யூய் போலீஸ் ஆனது, துப்பறியும் அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்க ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் தாமதித்தது என்று மேயர் குறிப்பிட்டுள்ளார்.

