13 C
Scarborough

கின்னஸ் சாதனை படைத்த வியாடினா 19 பசு மாடு!

Must read

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு என்ற கின்னஸ் சாதனையை வியாடினா 19 எனப் பெயரிடப்பட்டுள்ள  பசு மாடு படைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வியாடினா 19  என்ற பசு மாடு அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.இந்த பசுவானது, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை பூர்விகமாகக் கொண்ட நெலார் இனத்தைச் சேர்ந்தது.

நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடுகள் உருவத்தில் மிகப் பெரிய தோற்றம் கொண்டதோடு சுமார் 1,000 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் அடர்த்தியான தோல் கொண்டும் காணப்படும்.

அந்தவகையில் வியாடினா 19  என்ற பசு மாடு 2023ஆம் ஆண்டில் 4.3 மில்லியன் டொலருக்கும் 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டொலருக்கும்  ஏலத்தில் விடப்பட்ட போதும்  இந்த வருடம் அதை விட சற்றுக்  கூடுதலாக 4.82 மில்லியன் டொலருக்கு  ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகி போட்டியில் கலந்துகொண்ட வியாடினா 19, மிஸ் தென் அமெரிக்கா விருதையும் பெற்றுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article